நயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்

Oct 19, 2020 01:39 PM 3169

நயன்தாரா நடித்துள்ள நிழல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தென் இந்திய மொழிகளில் பிசியாக நடித்துவரும் நயன்தாரா நடிப்பில், கடைசியாக தர்பார் திரைப்படம் ரிலீஸானது. இப்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துவரும் அவருக்கு, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அப்பு என்.பட்டாத்திரி இயக்கத்தில், நிழல் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். குஞ்சக்கோ போபன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது.

image

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள பூமிகா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, ஜெயம் ரவியும், தமன்னாவும் வெளியிட்டுள்ளனர். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கடைசியாக க/பெ.ரணசிங்கம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள அவர், கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ரதிந்திரன் இயக்கத்தில் பூமிகா என்ற படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது திரைப்படமாக இப்படம் தயாராகியுள்ளது.

image

 

Comment

Successfully posted