வீதிக்கு தள்ளப்பட்ட நடிகை விஜயலட்சுமி ; வாடகை கொடுக்காததாலா? பழிவாங்கும் நடவடிக்கையா?

Apr 25, 2021 01:44 PM 2474

சென்னையில் நடிகை விஜயலட்சுமி, தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு 2 மாதமாக வாடகை கொடுக்காததால் வீதிக்கு வந்துள்ளார்.


நுங்கம்பாக்கம் ஹபிபுல்லா சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பிப்ரவரி மாதம் முதல் நடிகை விஜயலட்சுமி வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

கடந்த 2 மாதங்களாக விடுதிக்கு வாடகை வழங்காமல் தட்டி கழித்து வந்ததால், விடுதியை காலி செய்யுமாறு விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

விடுதி காப்பாளர் தொடர்ந்து வலியுறுத்தியும் வாடகை வழங்காததால், வீட்டில் இருந்து பொருட்கள் வெளியேற்றப்பட்டன.

இதனால், அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, விடுதி காப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழிவாங்க நினைப்பவர்கள் தன்னை நிம்மதியாக வாழவிடும்படி கண்ணீருடன் தெரிவித்தார்.

 

இது குறித்து விடுதி மேலாளரிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டனர்.

கடந்த 2 மாதங்களாக வாடகை கேட்ட போதெல்லாம் அலைகழிக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி பதிலளித்து வந்ததாகவும், மனிதாபிமான அடிப்படையில் 2 மாதம் பொறுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே விடுதி மேலாளரை செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேச விடாமல், நடிகை விஜயலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Comment

Successfully posted