வெற்றிகளை குவிக்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை - சீனா அதிரடி

Oct 15, 2018 03:17 PM 1230

வெற்றிகளை குவிக்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை - சீனா அதிரடி

சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறை அக்குபஞ்சர். இதன் பயனை விளையாட்டு வீரர்களும் அடைய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனையொட்டி 2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அதிக வெற்றிகளை குவிக்க வீரர்களுக்கு பாரம்பரிய மருத்துவமுறைகளுடன் கூடிய அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க அந்நாட்டு ஒலிம்பிக் குழு முடிவு செய்துள்ளது.

இதற்கான மையம் 2020 ஆண்டு தொடங்கப்படுகிறது. இந்த மையத்தில் விளையாட்டு வீரர்களின் உடல் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.

ஏற்கனவே 2008 ஆம் ஆண்டும் இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Comment

Successfully posted