கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக கூடுதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Dec 27, 2018 11:16 AM 313

கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அறிவித்துள்ளது.

கஜா புயல் மறுகட்டுமானம், மறு சீரமைப்பு மற்றும் பேரிடரிகளில் இருந்து மீளுதல் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, ஜெகநாதன் மற்றும் பிரதீப் குமார் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், பத்மநாதபுரம் துணை ஆட்சியராக பணியாற்றிய ராஜகோபால் சங்கரா கூடுதல் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted