கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போதிய கவனம் செலுத்த வேண்டும்

Apr 08, 2021 08:35 AM 405

கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது கவலை அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு ஒன்றின் விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால், நோய் தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் மக்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Comment

Successfully posted