ஆதித்யநாத், மாயாவதி தேர்தல் பிரசாரத்துக்கு தடை

Apr 15, 2019 05:27 PM 97

உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி 48 மணி நேரமும் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறி, மத கருத்துக்களை தெரிவித்ததால், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. எனவே, அவர்களது பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி, 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் பிரசாரம் செய்ய அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 72 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய யோகி ஆதித்யநாத்துக்கும், 48 மணி நேரம் பிரசாரம் செய்ய மாயாவதிக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Comment

Successfully posted