முதலமைச்சர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம்

Sep 24, 2019 05:31 PM 627

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் தொடங்கி உள்ளது.

பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், அதிமுக தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், அமைப்புச் செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted