அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம்

Jun 12, 2019 01:23 PM 54

அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், எம்.பி., எல்.எல்.ஏக்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் எதிர்வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

Comment

Successfully posted