2019 மக்களவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம்

Jan 11, 2019 06:37 AM 90

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனிடையே தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையமும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.


தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தல், பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேசமயம் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாக கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted