ஆப்கானில் பள்ளி மீது தீவிரவாதிகள் -48 மாணவர்கள் பலி

Aug 16, 2018 10:53 AM 653
காபூல் நகரில் செயல்பட்ட தனியார் பள்ளி ஒன்றில், பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்காக மாணவர்கள் படித்துகொண்டிருந்த போது, பள்ளி  வளாகத்திற்குள் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், வெடிகுண்டை வெடிக்கச் செய்ததார்.  இந்த குண்டு  வெடிப்பில் 48 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த   60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment

Successfully posted