இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு

May 12, 2021 03:19 PM 821

இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 48 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு புதிதாக 4 ஆயிரத்து 205 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 197ஆக அதிகரித்துள்ளது.

image

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 338 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 37 லட்சத்து 4 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 17 கோடியே 52 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்பட 18 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது

Comment

Successfully posted