தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் மாதம் திறப்பு

Mar 16, 2019 10:29 AM 84

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குப் பிறகு, விடுமுறை முடிந்து, பள்ளிகள் ஜூன் 3 ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் 29ம் தேதி துவங்கிய 12ம் வகுப்பு தேர்வுகள், வரும் 19ம் தேதி நிறைவு பெறுகிறது. இதேபோல், கடந்த 14ம் தேதி துவங்கிய 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், வரும் 29 ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், தேர்வுகளுக்குப் பிறகு, விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 3 ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Comment

Successfully posted