வெள்ளப்பெருக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சூழல் சுற்றுலா துவங்கியது

Nov 09, 2019 03:25 PM 63

கோவை மாவட்டம் பரளிக்காட்டில் வெள்ளப்பெருக்கால் நிறுத்தி வைக்கப்பட்ட சூழல் சுற்றுலா மூன்று வாரங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கப்பட்டது.

இயற்கை எழில் மிகுந்த மலைக் காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியில் நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு, அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து நீர்த்தேக்கத்தில் பரிசல் மூலம் பயணம் செய்து மகிழ்வர். கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் பெய்த கனமழையால், பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் பரிசல் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் அளவு குறைந்து அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்துள்ளதால், மூன்று வாரமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பரளிக்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், குடும்பத்துடன் நீர்த்தேக்கத்தில் பரிசலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

Comment

Successfully posted