நடிகர் விஷால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

Dec 21, 2018 11:56 AM 387

தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்ற விவகாரத்தில், நடிகர் விஷால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடைபெறுவதாக, தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் மீது ஏ.எல்.அழகப்பன், டி.சிவா, ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர், சுரேஷ் காமாட்சி ஆகியோர் தொடர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு ஒரு தரப்பினர் பூட்டு போட்டனர்.

இதனிடையே தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு வந்த விஷால் பூட்டை உடைக்க போவதாக கூறி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். போலீசாரின் எச்சரிக்கையும் மீறி தொடர்ச்சியாக விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்தனர். இதுதொடர்பாக பாண்டி பஜார் போலீசார் விஷால் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விஷால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comment

Successfully posted