லேண்டிங் கியர் செயலிழந்ததால், அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ்

May 07, 2021 09:21 AM 613

நோயாளியை ஏற்றிச் சென்ற விமானத்தின் லேண்டிங் கியர் செயலிழந்ததால், மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நாக்பூரில் இருந்து ஐதராபாத்திற்கு விமானப் பணியாளர்கள், நோயாளி உட்பட 5 பேருடன் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டது. விமானத்தின் லேண்டிங் கியர் செயல் இழந்ததால், மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வசே விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பெல்லி-லேண்டிங் உருவாக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் ரன்வேயில் இறங்கும்போது தீப்பிடிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கையாக நுரைகள் தெளிக்கப்பட்டிருந்தன. விமானம் தரையிறங்கியதும் அதில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


image

 

image

Comment

Successfully posted