போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னையில் காற்று மாசு

Jan 14, 2020 09:46 AM 1352

போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரித்ததால், சென்னையில் புகைமூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாளில் போகி பண்டிகை கொண்டாடப்படுவதால், பழையன கழிதலும்... புதியன புகுதலுக்கும் ஏற்ப வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை தீயிட்டு எரித்து போகியை மக்கள் கொண்டாடினர். பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால், சென்னையில் புகைமூட்டம் ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகைமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையில் காற்று மாசு அளவும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

Comment

Successfully posted