கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகங்கள்: முடுக்கி விடப்பட்ட தேடுதல் வேட்டை

Jun 12, 2019 09:21 AM 271

13 பேருடன் மாயமான விமானப்படை சரக்கு விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் - 32 ரக சரக்கு விமானம் கடந்த 3ம் தேதி காணாமல் போனது. அருணாச்சல பிரதேசம் மென்சுகா விமானப்படை தளம் நோக்கி சென்ற இந்த விமானம் என்ன ஆனது எனத் தெரியவில்லை. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகுதிகளில் 8 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், லிபோத் கிராமம் அருகே விமானத்தின் சிதைந்த பாகங்கள் நேற்று கண்டு பிடிக்கப்பட்டன. இதையடுத்து, மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு, சிறப்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று காலை முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் சென்ற 13 பேரின் நிலை என்ன ஆனது என விரைவில் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted