லோக்சபா தேர்தலை பின்னுக்கு தள்ளிய அஜித்தின் "விஸ்வாசம்" ஹேஷ்டேக்

Aug 23, 2019 08:38 PM 485

இந்தாண்டு அதிக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்காக விஸ்வாசம் ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் விஸ்வாசம் திரைபடம் வெளியானது. வசூலிலும் சாதனை படைத்த இத்திரைப்படத்தில் அஜீத், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். ரசிகர்களால் பெரிதும் கொண்டாப்பட்ட இத்திரைப்படத்தை படம் வெளியீட்டின் போதே ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில், இந்தாண்டின் அரை வருட காலத்தில் இந்திய அளவில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்காக லோக் சபா தேர்தல் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பின்னிக்கு தள்ளி விஸ்வாசம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இது தொடர்பாக விஸ்வாசம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதன்படி 2-வது இடத்தில் லோக்சபா தேர்தலும், 3-வது இடத்தில் கிரிக்கெட் உலக கோப்பையும் உள்ளது.

Comment

Successfully posted