வலிமை பட மோஷன் போஸ்டர் ; உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள் !

Jul 11, 2021 06:20 PM 2321
2 வருடத்திற்கு பிறகு வெளியான வலிமை அப்டேட் - வலிமை பட மோஷன் போஸ்டர் வெளியானதால் உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் என்ற காம்போவில் உருவாகி வருகிறது வலிமை..
 
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது கணவர் போனி கபூரின் பட நிறுவனத்துக்காக இரண்டு படங்களை நடித்து தருவதாக அஜித் உறுதி அளித்திருந்தார். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது வலிமையிலும் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாகியிருப்பவர் பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி, இவர் காலாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

2019ம் ஆண்டின் இறுதியில் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், கொரோனாவின் தொற்றுகாரணமாக இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெராமல் தள்ளிக்கொண்டே சென்றது.
 
மேலும் படம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.

பொறுமையிழந்த அஜித் ரசிகர்கள் பலரிடம் அப்டேட் கேட்க தொடங்கினார்.

வெளிநாடுகள் முதல் உள்நாட்டில் நடைப்பெறும் விளையாட்டு போட்டிகள், தலைவர்கள் தேர்தல் நேரங்களில் பிரச்சாரம் கேட்கும் பொழுது என வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரிக்க தொடங்கினர்.

இந்நிலையில் டபுள் ட்ரீட்டாக, இரண்டு வருடம் கழித்து வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
image

இன்று(11.07.2021) மாலை வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது முதல் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

#Valimai காலை முதலே ட்ரெண்டிங்கில் இருக்க , தடைபட்டிருந்த வலிமை படத்தின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது என்ற செய்தியோடு, வெளியானது  வலிமை பட மோஷன் போஸ்டர்....
image

Comment

Successfully posted

Super User

வீடியோ காட்சிகள் இருந்தால் சரியாக இருக்கும்