உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர் கந்தசாமி

Dec 16, 2019 10:54 AM 742

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

Comment

Successfully posted