அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பேங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி அணிகள் வெற்றி

May 21, 2019 08:18 AM 174

பெரிய குளத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பேங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி அணிகள் வெற்றி பெற்றன.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூப்லி ஸ்போர்ட்ஸ் கிளப் இன் 60 ஆம் ஆண்டின் வைர விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அகில இந்திய அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியின் லீக் சுற்றில் பேங்க் ஆப் பரோடா பெங்களூரு அணியும், ஏ ஓ சி அணியும் மோதின. இதில் 103- 69 என்ற புள்ளிகள் கணக்கில் பேங்க் ஆப் பரோடா அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியன் வங்கி சென்னை அணியும், இந்திய தரைப்படை அணியும் மோதின இதில் 79 க்கு 69 என்ற புள்ளிகள் பெற்று இந்தியன் வங்கி சென்னை அணி வெற்றி பெற்றது.

Comment

Successfully posted