வலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

Jun 25, 2019 08:15 PM 72

வலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வலிமையான தேசத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம் என ஒவ்வொரு இந்திய வாக்காளர்களும் கருதியதாக அவர் தெரிவித்தார். 70 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை, தங்களின் 5 ஆண்டுகளில் மதிப்பிட முடியாது என்றார். தங்களது ஐந்தாண்டு ஆட்சியை பார்த்து தான் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து தான் மக்கள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தங்களுக்கு வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்தார். மக்களுக்கு தேவையான திட்டங்களை விவாதித்து உருவாக்குவோம் என்று கூறிய பிரதமர், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை தான் மக்கள் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Comment

Successfully posted