உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

Dec 03, 2019 09:05 PM 428

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரநிதிகளுடனான கூட்டம் மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர்கள் அண்ணாதுரை மற்றும் கிரண்குராலா ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, பாஜக, பா.ம.க மற்றும் திமுக உள்ளிட்ட அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, ஊரக பகுதிகளில் நன்னடத்தை விதிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் எனவும், சாதி, சமுக உணர்வுகளை தூண்டும் வகையில் பிரசாரங்கள் செய்ய கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted