ஓசூர் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

Mar 13, 2019 03:21 PM 339

ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் விமல்ராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார் ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசியல் பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டால் அதன் செலவினங்கள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் எனவும் அறிவுறுத்தினார். அரசியல் கட்சிகள் எவ்வாறு பிரசாரம் செய்ய வேண்டும், தேர்தல் விதிமுறைகள் குறித்த கட்சி பிரமுகர்களின் கேள்விகளுக்கு வட்டாட்சியர் விமல்ராஜ் விளக்கமளித்தார்.

Comment

Successfully posted