தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

Aug 14, 2018 03:51 PM 507
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே 22 ஆம் தேதி பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது பேரணியில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் வழக்குகள் தொடரப்பட்டன.  இதனிடையே துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Comment

Successfully posted