கால்பந்து மைதானத்தில் மலர்ந்த காதல் - வைரல் வீடியோ

Jul 05, 2021 06:57 PM 2877

அமெரிக்க கால்பந்து விளையாட்டு வீரர் ஹசன் டாட்சன் ஸ்டீபன்சன் மைதானத்தில் தன்னுடைய காதலியிடம் காதலை வெளிப்படுத்திய காட்சி காண்போரை நெகிழ செய்தது.

அமெரிக்காவில் மெஜர் லீக் சாக்கர் (Major League Soccer) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் மினசோட்டா மற்றும் சான் ஜோஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் 2-2 என்ற விகிதத்தில் சமநிலையை எட்டியதால் ஆட்டம் சமனில் முடிந்தது. போட்டி முடிந்தபிறகு கால்பந்து மைதானத்தில் வைத்து காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் மினசோட்டா க்ளப் வீரர் ஹசன் டாட்சன் ஸ்டீபன்சன். மைதானத்தில் ரசிகர்கள் முழக்கம் எழுப்ப, தன் காதலி முன்பு ஒரு காலை மடக்கி மோதிரம் ஒன்றை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார் ஸ்டீபன்சன்.

அரங்கம் முழுவதும் கரவொலியால் அதிர்ந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அவரது காதலி புன்னகையுடன் ஸ்டீபன்சனின் காதலை ஏற்றுக்கொண்டார். பின்பு இருவரும் கட்டி அணைத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மறக்க முடியாத இந்த நிகழ்வை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஸ்டீபன்சனின் காதலி பிட்ரா ஹீகோவிக்.

``என் இதயம் உணரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தையே இல்லை. உன்னால் காதலிக்கப்படுவது எனக்கு கிடைத்த பாக்கியம்” என்று அவர் தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

  https://www.instagram.com/p/CQ6it2sp0QE/?utm_source=ig_web_copy_link

 

 

Comment

Successfully posted

Super User

thamilnattula yethirkatchi irukkaa


Super User

Super bro