உத்திரபிரதேசத்தில் கடுமையாக உயர்ந்த காற்று மாசுபாட்டின் அளவு

Oct 31, 2019 03:45 PM 124

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத், நொய்டா, கான்பூர் நகரங்களில் காற்று மாசுபாட்டால் மக்கள் அவதியடைந்துள்ளனர். டெல்லியை ஒட்டிய நகரங்களான காசியாபாத்திலும், நொய்டாவிலும் தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை ஆகியவற்றுடன் தீபாவளியையொட்டி வெடிகளால் ஏற்பட்ட புகையும் சேர்ந்ததால் காற்று மாசு மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. இதேபோல் கான்பூரிலும் காற்றில் மாசின் அளவு மோசமான அளவு உயர்ந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காலையில் பனிமூட்டத்துடன் புகை மூட்டமும் சேர்ந்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மூச்சுத் திணறலால் அவதியடைந்தனர்.

Comment

Successfully posted