உ.பியில் 60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுமி

Apr 05, 2019 07:07 AM 100

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார் அவரை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் போராடி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலம் ஃபெருகாபாத்தில் 8 வயதுடைய சிறுமி தனது வீட்டின் அருகில் விளையாடி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமான வீட்டின் அருகில் இருந்த ஆழ்துணை கிணற்றிற்குள் தவறி விழுந்தார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மீட்புப்படையினருக்கு தகவல் அளித்தனர்.

தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் நடுவண் படை என வீரர்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துணை கிணறு 60 அடிக்கும் மேல் உள்ளதால், மீட்புப்படையினர் சிறுமியை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Comment

Successfully posted