கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்

Aug 18, 2018 03:43 PM 920

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக அரசு ஏற்கெனவே 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததை சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர்,

தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள், கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கடும் பாதிப்பை கருத்தில் கொண்டு கேரளாவுக்கு கூடுதலாக 5 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால்பவுடர், 15 ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால், 10 ஆயிரம் போர்வைகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதே போன்று வேஷ்டிகள், கைலிகள், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள்,  மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள்  அனுப்பி  வைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted