பொதுத்துறை வங்கிகளுக்கு 83 ஆயிரம் கோடி வழங்கப்படும் - நிதியமைச்சர் அருண்ஜெட்லி

Dec 21, 2018 06:47 AM 328


பொதுத்துறை வங்கிகளுக்கு 83 ஆயிரம் கோடி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.


பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் சுமையால் தத்தளிக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிய பலர் அதை முறையாக செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டனர். இதனால் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு கடன் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் வழியாகவே விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளுக்கு நடப்பு நிதியாண்டின் மீதிக்காலத்தில் மத்திய அரசு 83 ஆயிரம் கோடி வழங்கும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதன் மூலம் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Comment

Successfully posted