ஸ்டெர்லைட் விவகாரம் -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Aug 14, 2018 10:53 AM 623
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி, பொதுமக்கள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது.  போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர்  உயிரிழந்தனர்.  இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம்,   ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ளலாம் என  உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.  அதில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கும்  தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted