சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

Dec 02, 2018 12:21 PM 546

சபரிமலையில் நீடித்து வரும் அசாதாரண சூழலால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு, 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், ஐயப்பன் கோயில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மாதத்தில் இருந்து 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் நீதிபதிகள் கருத்தின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted