காவிரி குறுக்கே கட்டப்பட்டுள்ள சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு-அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு

Nov 18, 2019 12:33 PM 112

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்திற்கான சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் பாசூரில் கதவணை மின் உற்பத்திக்காக காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஈரோடு, நாமக்கல் ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பாலத்திற்கான சாலையில் கடந்த வாரம் மண் சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சாலை சரிசெய்யும் பணிகளை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

 

Comment

Successfully posted