அஜித்துடன் மூன்றாவது முறையாக இணையும் அனிகா

Sep 10, 2019 10:48 AM 852

மலையாளத்தில் 2010ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன், தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து மிருதன் படத்தில் நடித்த அனிகா மீண்டும் இந்த ஆண்டு வெளியான அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தற்போது மூன்றாவது முறையாக நடிகர் அஜித்துடன் நடிக்க உள்ளதாக அனிகா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அஜித் அடுத்ததாக நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடிக்க உள்ளாரா அல்லது வேறு எதும் கதாபாத்திரம் ஏற்க உள்ளாரா என்பது தெரியவில்லை .

Comment

Successfully posted