டெல்லி சட்டப்பேரவையை கலைத்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவு

Feb 11, 2020 02:52 PM 609

டெல்லியில் 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில், சட்டப்பேரவையை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் கலைத்தார்.

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. அந்த கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், முதலமைச்சர் கெஜ்வாரில் தலைமையிலான சட்டப்பேரவையை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் கலைத்து உத்தரவிட்டார்.

Comment

Successfully posted