அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

Sep 16, 2019 10:38 AM 226

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவச் சிலைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

திருத்தணியில் சென்னை - சித்தூர் சாலைச் சந்திப்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு முழு உருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரி, நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நட்டு சிலைகள் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted