அண்ணா பல்கலைக்கழகம் இன்று முதல் வழக்கம்போல் செயல்படும்!

Jul 06, 2020 06:38 AM 213

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என பல்கலைகழக பதிவாளர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, பல்கலைக்கழகம் மீண்டும் வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்களும், ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள பதிவாளர், பணிக்கு வாராத ஊழியர்கள், பேராசிரியர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted