ராமாயண யாத்திரைக்கு புதிய சுற்றுலா ரயில் அறிவிப்பு

Nov 07, 2018 03:40 PM 329

ராமாயண யாத்திரை உள்ளிட்ட பல்வேறு புதிய சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே, உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து அறிவித்துள்ளன.

ராமாயண யாத்திரை என்ற இந்த புதிய திட்டம் வரும் 14-ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு கர்நாடகாவின் ஹம்பி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சித்திரகூடம், தர்பங்கா வழியாக மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் கடந்து நேபாளத்தில் சீதை பிறந்த இடமான ஜனக்புரிக்கு செல்கிறது.

இதைத்தொடர்ந்து மீண்டும் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் வந்தடைகிறது. 15 நாள் கொண்ட இந்த ரயில் யாத்திரைக்கு 15,580 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவா சுற்றுலாவிற்கு டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 14-ம் தேதி புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மூகாம்பிகை மற்றும் கர்நாடக ஆலயங்களுக்கும் இதே போன்ற புதிய சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted