தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Jul 01, 2020 07:59 PM 918

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 882 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 3 ஆயிரத்து 882 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 342 பேர் ஆண்கள் என்றும், ஆயிரத்து 539 பேர் பெண்கள் என்றும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. திருநங்கை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 60 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 852 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 926 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 856 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 56.27 சதவீதமாக உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் 226 பேருக்கு கொரோனா பாதிப்பு..
  • மதுரையில் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு..
  • திருவள்ளூரில் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு..
  • வேலூரில் 77 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்..
  • காஞ்சிபுரத்தில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு..
  • திருவண்ணாமலையில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு..
  • சேலத்தில் 178 பேருக்கு கொரோனா பாதிப்பு..
  • கள்ளக்குறிச்சியில் 28 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது...

Comment

Successfully posted