வங்கியில் முதியவரிடம் ரூ.10,000 திருடிய சென்ற மற்றொரு முதியவர் கைது

Oct 12, 2019 09:01 AM 357

சிவகங்கை மாவட்டம், பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், முதியவரிடம் 10 ஆயிரம் ரூபாயை திருடிய சென்ற மற்றொரு முதியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். முதியவர் கண்ணப்பன் 10 ஆயிரம் ரூபாயை வங்கியிலிருந்து எடுப்பதை நோட்டமிட்ட மற்றொரு முதியவரான பழனிசாமி கண் இமைக்கும் நேரத்தில் பணத்தை திருடிச் சென்றுவிட்டார்.

வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் கைவரிசை காட்டிய முதியவர் பழனிசாமியை கைது செய்தனர்.

Comment

Successfully posted