டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது

Feb 18, 2020 10:22 PM 394

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி காவல்துறையினர் சென்னையில் கைது செய்துள்ளனர்.

குரூப்-4 தரவரிசை பட்டியல் வெளியான போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்த முறைகேடு குறித்த புகாரின் பேரில், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது வரை குரூப்-2A தேர்வில் நடந்த முறைகேட்டில் 22 நபர்களும், குரூப்-4 தேர்வில் 20 நபர்களும் மற்றும் வி.ஏ.ஓ தேர்வில் 4 நபர்களும் என, மொத்தம் 46 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக்குமார் என்பவர், முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாருடன் கூட்டு சேர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Comment

Successfully posted