அந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

Feb 13, 2020 11:11 AM 386

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் கொலைக்கு பழி தீர்க்க அவரது மகன் அரவிந்தன் தங்களை அனுப்பியதாக கூலிப்படையினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி கோவை நீதிமன்றத்தில் அரவிந்தன் சரணடைந்தார். இந்த நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய அரவிந்தனின் உறவினரும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலருமான பிரபாகரன் என்பவரை வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Comment

Successfully posted