டெல்லியில் கவலரம் ஏற்படுவதாக வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை -காவல்துறை

Mar 02, 2020 11:13 AM 341

டெல்லியில் கவலரம் ஏற்படுவதாக வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்பும் நிலையில், மீண்டும் வன்முறை வெடித்ததாக நேற்று வதந்தி பரவியது. இதனால் பாட்லா பகுதியில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள டெல்லி காவல்துறையினர், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையே, ஷகீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted