அப்போலோ தொடர்ந்த வழக்கை நிராகரித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

Apr 04, 2019 02:12 PM 255

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், தற்போது வரை 90 சதவீத விசாரணையை முடித்துள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து வல்லுநர்கள்குழு அமைக்கவும், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி அப்போலோ மருத்துவமணை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தின் விசாரணை 90 சதவீதம் முடிந்து விட்டதால், அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அப்போலோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் மறுத்துவிட்டது.

Comment

Successfully posted