திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

Jan 02, 2019 05:29 PM 434

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு இம்மாதம் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு, மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், மாரிமுத்து என்பவர் தரப்பில் முறையிட்டு உள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவுற்ற பிறகு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்.

அதுவரை இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி ரஞ்சன் கோகாய் மனுதாரர் இதை மனுவாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.

Comment

Successfully posted