ஆப்பிள் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்!

Nov 16, 2019 02:08 PM 509

ஆப்பிள் நிறுவனத்தின் 16inch macbook pro லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய macbook pro மாடலில் ரெட்டினா டிஸ்ப்ளே, 9 ஆம் தலைமுறை processor, அதிகபட்சம் 64 GB ரேம், 8000 GB மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய macbook pro மாடலில் 16 inch ரெட்டினா 3072x1920 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர், AMD ரேடியான் ப்ரோ 5000M சீரிஸ் கிராஃபிக்ஸ் மற்றும் 8 GB ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 64 GB ரேம், 512 GB மற்றும் 1000 GB ssd வழங்கப்பட்டுள்ளது. மெமரியை கூடுதலாக 8000 GB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. முந்தைய macbook மாடல்களில் இருந்துவந்த கீபோர்டு சார்ந்த பிரச்சனைகள் புதிய macbook pro மாடலில் ஏற்படாத வகையில் புதிய லேப்டாப்களை ஆப்பிள் உருவாக்கி இருக்கிறது.

புதிய ஆப்பிள் macbook pro 16 inch 512 GB மாடல் விலை ரூ. 199,900 என விலை அறிவிக்கப்பட்டுள்ளது

Comment

Successfully posted