மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமனம் - அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு நிர்வாகிகள் வாழ்த்து!

Nov 16, 2020 10:08 PM 2926

மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை, அ.தி.மு.க. MLA-க்களும், கடலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மண்டலங்கள் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை அ.தி.மு.க. தலைமை நியமித்தது. அதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, பண்ருட்டி MLA சத்தியா பன்னீர்செல்வம், விருத்தாச்சலம் MLA வி.டி.கலைச்செல்வன் மற்றும் கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Comment

Successfully posted