மாஸ்கோ நகரில் மெட்ரோ ரயிலை இயக்க பெண் ஓட்டுநர்கள் நியமனம்!

Jan 05, 2021 08:07 AM 2140

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், மெட்ரோ ரயில்களை இயக்க, பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1936 முதல் 1980 வரை, பெண் ஓட்டுநர்கள் இருந்து வந்த நிலையில், மெட்ரோ ரயில்கள் இயக்கம் உள்ளிட்ட கடினமான வேலைகளில் ஈடுபட பெண்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

image

இந்நிலையில், ரஷ்ய நாட்டின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பெண் ஓட்டுநர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மெட்ரோ ரயில்களை இயக்க, முதற்கட்டமாக 12 பெண் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

Comment

Successfully posted