இடைக்கால கொரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல்!

Dec 02, 2020 03:51 PM 1527

ஃபைசர் - பயோன் நிறுவனங்கள் தயாரித்த கொரோனா நோய் தொற்றுக்கான இடைக்கால தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனம் கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்து, பாதுகாப்பானது என்று பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான எம்.ஹெச்.ஆர்.ஏ தெரிவித்தது. அதிக முன்னுரிமை வழங்கப்படும் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.

இரண்டு டோஸ்களாக வழங்கப்பட உள்ள இந்த தடுப்பு மருந்தை, நான்கு கோடி டோஸ்களை பிரிட்டன் ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது. தற்போது இதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted