இத்தாலியில் , 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேர் கண்டுபிடிப்பு!

Mar 01, 2021 01:19 PM 3176

இத்தாலியில் பாம்பேய் நகரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கி.பி 79 இல் வெசுவியஸ் மலையில், எரிமலை வெடித்து, பாம்பேய் நகரம் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடப்பட்டது.

அங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தற்போது தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில் இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேரை திருவிழாக் காலங்கள் மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  

Comment

Successfully posted